Paristamil Navigation Paristamil advert login

டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா?

டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா?

12 சித்திரை 2025 சனி 11:08 | பார்வைகள் : 191


டீ குடிப்பது மனதிற்கு ஒரு புத்துணர்வைத் தரும். நாள் முழுவதும் ஏற்படும் சோர்வை குறைக்க பலரும் டீயை ஆர்வமுடன் அருந்துகிறார்கள். சிலர் ஒவ்வொரு சிப்-யையும் ரசித்து பருகுவார்கள்.
 
ஆனால், தேவைக்கு அதிகமாக டீ குடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இரும்புச்சத்து உடலில் குறைவடைந்து, பலவிதமான உடல் சிக்கல்களை உருவாக்கும் அபாயம் உள்ளது.
 
ஒரு நாளில் 2 முதல் 3 கப் டீ அல்லது காபி மட்டும் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இது தூக்கத்தையும் ஆற்றலையும் பாதுகாக்க உதவுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதனை பரிந்துரை செய்கிறது.
 
அதே நேரத்தில், 4-5 கப்புக்கு மேல்   டீ குடிப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என தேசிய சுகாதார நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. அதிக டீ உணர்வுப் பதட்டத்தை அதிகரிக்கக் கூடியது. வெறும் வயிற்றில் டீ குடித்தால் வாயுவும், அமிலக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும், டீயிலும் காபியிலும் உள்ள ‘டானின்’ என்ற பொருள், உணவிலிருந்து இரும்பை உறிஞ்சும் செயலைத் தடுக்கிறது. ஒரு நாளில் 5 கப்புக்கு மேல் குடிப்பது இரத்த சோகையை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அதிக அளவு டீ உட்கொள்வது, இதயத் துடிப்பில் சீர்கேடு ஏற்படுத்தும். அமெரிக்க இதய சங்கமும் இதை உறுதி செய்துள்ளது.அதனால், உணவுக்குப் பிறகு டீ அல்லது காபி குடிப்பது சிறந்தது. ஒரு நாளுக்கு 3 கப்பை தாண்ட வேண்டாம் 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்