Paristamil Navigation Paristamil advert login

இனி சிக்ஸர் அடிக்குறது தான் வேலை; சொல்கிறார் அண்ணாமலை

இனி சிக்ஸர் அடிக்குறது தான் வேலை; சொல்கிறார் அண்ணாமலை

12 சித்திரை 2025 சனி 13:21 | பார்வைகள் : 296


எனக்கு இனி சிக்ஸ் அடிக்குறது தான் வேலை. கஷ்டமான பால் எல்லாம் நயினார் நாகேந்திரன் ஆடிக்குவாரு'' என பா.ஜ., மாநில தலைவர் பதவியில் இருந்து விலகும் அண்ணாமலை பேசினார்.

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: டி.டி.வி., தினகரன் நேற்று மருத்துவமனைக்கு சென்றது குறித்து 2 நாட்களுக்கு முன்பு கூறினார். டி.டி.வி., இதயம், நல்ல இதயம் என்று தமிழக மக்களுக்கு தெரிந்து இருக்கும். நாங்கள் சொன்னால் ஏற்று கொள்வார்களா என்பது தெரியவில்லை. இதயம் நன்றாக இருக்கிறது என அப்பல்லோ மருத்துவமனை சர்டிபிகேட் கொடுத்து இருக்கிறது.

நீங்கள் அற்புதமான மனிதர். நீங்கள் நினைக்க கூடிய மாற்றங்கள் எல்லாம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இத்தனை நாட்கள் எனக்கென்று ஒரு பொறுப்பு கட்டுப்பாடு இருந்தது. அண்ணாமலையாக நான் அரசியல் பேச முடியும். செய்ய முடியும். அடித்து ஆட கூடிய பாக்சிங் கலை அரசியல்வாதிக்கு தேவைப்படுகிறது. அதனால் இன்னும் கொஞ்சம் பேச்சு ஸ்டைலை மாற்ற வேண்டும்.

பக்குவமாக பேசுவதற்கு நயினார் நாகேந்திரன் இருக்கிறார். கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரனிடம் பேசி கொள்ளுங்கள். இனி நம்ம பாலை மட்டும் நாம அடித்தால் போதும். இனி பவுன்சர்ஸ், டப் பால்ஸ் எல்லாம் நயினார் நாகேந்திரன் பார்த்து கொள்வார். இனி நாம சிக்ஸ் அடிப்பது தான் நமது வேலை. கஷ்டமான பால் எல்லாம் நயினார் நாகேந்திரன் ஆடிக்குவாரு. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்