மலர் கண்காட்சியுடன் கூடிய Parc floral de Paris - தாவரவியல் பூங்கா!
25 கார்த்திகை 2016 வெள்ளி 12:00 | பார்வைகள் : 19648
பரிசுக்குள் அமைந்துள்ள பூங்காக்கள் குறித்து தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள பொது பூங்காக்கள் குறித்தும், அங்கு உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் தெரிவித்து வருகிறோம். இதோ.. இன்று 12ஆம் வட்டாரத்தில் உள்ள Parc floral de Paris பூங்கா குறித்து சில சுவாரஷ்யமான தகவல்கள் உங்களுக்காக..!!
பரிசுக்குள் மொத்தம் நான்கே நான்கு தாவரவியல் பூங்காக்கள் தான் உள்ளன. அதின் மிக முக்கியமான தாவரவியல் பூங்கா இதுவாகும். (மற்றவை குறித்த தகவல்கள் பின்னர். ) 12 ஆம் வட்டாரத்தில் Bois de Vincennes இல் அமைந்துள்ளது.
இந்த பூக்காவின் வரலாறு பல சோக கதைகளை உள்ளடக்கியது. எப்போது உருவாக்கப்பட்டது என்பது மிக குழப்பமான நிலையில், 12 ஆம் நூற்றாண்டில் அரசர் Philippe-Auguste யினால் இழுத்து மூடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து திறக்கப்பட்டாலும், பிரெஞ்சு புரட்சியின் போது Napoleon Bonaparte காலத்தில், இந்த பூங்கா இராணுவ பயிற்சி தளத்துக்காக கையகப்படுத்தப்பட்டது.
பின்னர் மாவீரன் மூன்றாம் நெப்போலியனால் மீண்டும் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பாவனைக்காக விடும் போது.. முதலாம் உலகப்போர் தொடங்கியது..! இப்படியாக பல சிக்கல்கள் சேதாரங்களை தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு, 'இனிமேல் மூடுவதில்லை!' என உறுதியாக திறந்து வைத்தார்கள் Parc floral de Parisஐ. இப்போது வரை திறந்திருக்கிறது.
வருடா வருடம் நடைபெறும் மலர் கண்காட்சிகள் இங்கு மகா பிரபலம். அப்போது பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார். மொத்தம் 31 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த பூங்கா.., பரிசின் நான்காவது மிகப்பெரிய பூங்காவாகும்.
மலர்க் கண்காட்சியின் போது, சிறியது முதல் பெரியது வரை வகைப்படுத்தி, வெவ்வேறு அளவுகளிலான பூக்களை காட்சிக்கு வைத்திரார்கள். பார்த்து ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்!
மக்கள் அதிக அளவில் இரசிப்பது, ஜப்பானின் போன்சாய் மரங்களின் அழகை. மிகச் சிறிய அளவிலான 'பெரிய' மரங்கள் இவை. புரியவில்லையா?? ஒரு ஆலமரத்தை மிக சிறியதாக உருவாக்கினால் எப்படி இருக்கும்.?? அதுபோன்ற 'மினியேச்சர்' மரங்கள் தான் போன்சாய் மரங்கள். இந்த கண்காட்சிக்காக ஜப்பானில் இருந்து கொண்டுவரப்படுகிறது போன்சாய் மரங்கள்.
Route de la Pyramide, 75012 Paris இல் அமைந்துள்ள இந்த பூங்கா, காலை 9.30இல் இருந்து 5 மணிவரை திறந்திருக்கும். அண்ணளவாக ஒவ்வொருவரும் 3.5 மணிநேரம் செலவு செய்கிறார்களா இங்கு. நீங்கள் எப்படி??