Mantes-la-Jolie :நீரில் மூழ்கி 4 வயதுச் சிறுவன் பலி!!
12 சித்திரை 2025 சனி 13:26 | பார்வைகள் : 3604
நான்கு வயதுச் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். Mantes-la-Jolie (Yvelines) நகரில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 11, நேற்று வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள Gassicourt எனும் குளத்துக்கு தனது பெற்றோர்களுடன் வருகை தந்த குறித்த சிறுவன், குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த போது - பெற்றோர்கள் அறியாத நேரத்தில் குளத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.
சில நிமிடங்கள் கழித்தே சிறுவனைக் காணவில்லை என்பது தெரியவர, பின்னர் குளத்தில் விழுந்திருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்து, மீட்புக்குழுவினர் அழைக்கப்பட்டனர்
சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan