பரிஸ் நீச்சல் குளங்களில் பெண்கள் தங்களுக்கும் தெரியாமல் படம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள்!

12 சித்திரை 2025 சனி 13:45 | பார்வைகள் : 841
பரிஸ் 19 இல் உள்ள Georges-Herman நீச்சல் குளத்தில், பெண்கள் தங்களுக்கும் தெரியாமல் வீடியோவாகப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. பத்திரிகையாளர் லாரேன் டேக்கார்ட் (Laurène Daycard) உடை மாற்றும் போது, ஒரு பையில் சிறிய துளையிலிருந்து ஸ்மார்ட் ஃபோன் கேமரா பார்க்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இதுபோன்று 17 புகார்கள் முறையிடப்பட்டுள்ளன. 2023-இல் நடந்த சம்பவம் பற்றி சாரா என்ற பெண்ணும், ஒருவர் தன்னை தவறாக காண்பித்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவங்கள் பரவலாக வெளிவந்ததை அடுத்து, பரிஸ் நகராட்சி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
நகரத்தில் உள்ள 40 நீச்சல் குளங்களில் உள்ள உடைமாற்றும் அறைகள் மற்றும் சுவர்களில் உள்ள குறைகள் சரிபார்க்கப்பவுள்ளது. மேலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.