பலனளிக்கும் குறைந்த உமிழ்வு மண்டலப்பகுதிகள்!

12 சித்திரை 2025 சனி 18:14 | பார்வைகள் : 526
’கிரான் பரி’ பகுதிக்குள் பல்வேறு நகரங்களில் குறைந்த உமிழ்வு மண்டலப்பகுதிகள் (ZFE ) உருவாக்கப்பட்டுள்ளன. வழிமண்டல மாசடைவை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு பல்வேறு போக்குவரத்து விதிகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், இந்த விதிமுறைகளினால் நல்ல பலன் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டில் இருந்து காற்றில் கலந்துள்ள சுவாசிக்க ஏற்புடையதல்லாத d'oxyde d'azote (நைதரசன் ஒக்சைட்) 42% சதவீதம் குறைவடைந்துள்ளது. அதேவேளை கடந்த 20 ஆண்டுகளில் வளிமண்டல மாசு பாதியாக குறைந்துள்ளது.
இல்-து-பிரான்சுக்குள் வளிமண்டல மாசடைவை கண்காணிக்கும் Airparif நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. அத்தோடு விரைவில், மகரந்த துகள்கள் குறித்த ”indice pollen எனும் உடனடி தரவுகளை அறிந்துகொள்ளக்கூடியதான இயந்திரங்களை பொருத்தி, துல்லியமான தகவல்களை தினமும் வெளியிட உள்ளதாகவும் Airparif தெரிவித்துள்ளது.