Paristamil Navigation Paristamil advert login

Opéra-Théâtre de Metz - பிரான்சின் மிகப்பழமையான திரையரங்கு!!

Opéra-Théâtre de Metz - பிரான்சின் மிகப்பழமையான திரையரங்கு!!

24 கார்த்திகை 2016 வியாழன் 12:30 | பார்வைகள் : 19437


ஒபேரா வகை திரையங்குகள் உலகம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக நம்நாட்டில் இன்னும் அதிகமாகவே!! சரி... பிரான்சிம் மிக பழமையான திரையரங்கு எது என தெரியுமா உங்களுக்கு.... Metz நகரில் இருக்கும், Opéra-Théâtre de Metz அரங்குதான் பிரான்சின் மிக பழமையானது. இது குறித்த சில தகவல்கள்....!!
 
கட்டிடக்கலைஞர் Jacques Oger தலைமையில், 1732 ஆம் ஆண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 1752 இல் திறந்துவைக்கப்பட்டது Opéra-Théâtre de Metz அரங்கு. கிட்டத்தட்ட 260 வருடங்களுக்கும் மேல் நின்றிருக்கிறது அரங்கு. 
 
Metz நகரின் Petit-Saulcy island பகுதியில் இருக்கிறது இந்த Opéra-Théâtre de Metz. 750 பேர்வரை ஒரே சமையத்தில் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் கொண்டுள்ளது. 
 
Communauté d’Agglomération de Metz Métropole க்கு சொந்தமான இது பிரான்சின் மிக பழமையான திரையரங்கு மட்டும் இல்லாமல்... ஐரோப்பா முழுவதிலும் உள்ள மிகப்பழமையான ஒரு சில திரையரங்குகளில் இதுவும் ஒன்று. 
 
1732இல் இருந்து, 1752 வரை கட்டிட காலம் 20 வருடங்கள் எடுத்துக்கொண்டது. ஏன் என தெரியுமா...?? இடையில் எட்டு வருடங்கள் Austrian மகா யுத்தம் இடம்பெற்றது. அதன்போது பணிகளை இடை நிறுத்திவிட்டார்கள். 
 
பின்னர், மேலும் சில பல சிக்கல்களை சந்தித்து, பெப்ரவரி 3, 1752 ஆம் ஆண்டு ஆளுநர் duke of Belle-Isle இனால் திறந்து வைக்கப்பட்டது. 'பிரான்சின் மிக அழகான ஒபேரா அரங்கு இது' என அப்போது குறிப்பிட்டார். 
 
பிரத்யேகமாக neo-Classical எனும் ஒலி அமைப்புடன் உருவாக்கப்பட்ட இத்திரையரங்கு, சிறப்பு நிகழ்வுகள், திரையிடல்கள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
திரையரங்கு திறக்கப்பட்ட போது 1,382 இருக்கைகள் கொண்டிருந்தது. பிரெஞ்சு புரட்சியின் பின்னர், சில நிர்மாண பணிகளை தொடர்ந்து 750 இருக்கைகளாக குறைக்கப்பட்டது. 
 
தற்போது, Opéra-Théâtre de Metz அரங்கு, வருடத்துக்கு 60 வகையான நிகழ்வுகளை நடாத்தி வருகிறது. கவிதை வாசித்தல், நாடகம், நடன அமைப்பு உள்ளிட்ட பல போட்டிகள் மேடையேற்றப்படுகின்றன.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்