Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் மரதன்: முக்கிய சாலைகள் மூடப்படும், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

பரிஸ் மரதன்: முக்கிய சாலைகள் மூடப்படும், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

13 சித்திரை 2025 ஞாயிறு 01:19 | பார்வைகள் : 1074


ஞாயிற்றுக்கிழமை,ஏப்ரல் 13 ஆம் திகதி பரிஸ் மரதன் போட்டியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, காவல்துறை மரதன் போட்டி நடைபெறுவதற்கு முன்பும், போட்டி நிறைவடைந்த பின்பும் போக்குவரத்து பாதைகள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளது. 

போட்டி நடைபெறும் நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் சம்பந்தப்பட்ட தெருக்களை தவிர்த்து செல்ல எச்சரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் Paris 7, 8,9,11,13 மற்றும் Paris 16 இல் உள்ள பாதைகளில் அமுல்படுத்தப்படவுள்ளது. சில தெருக்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பின்வரும் தெருக்களில் காலை 7:55 மணி முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை காணலாம்.

L’avenue des Champs-Élysées;

L’avenue Foch ;

La place de la Concorde ;

L’Opéra Garnier ;

Le Carrousel du Louvre ;

La rue de Rivoli ;

La place de la Bastille ;

La rue du Faubourg-Saint-Antoine ;

La place de la Nation ;

La rue de Picpus ;

L’avenue Daumesnil ;

La route de la Pyramide ;

L’avenue de Gravelle ;

La rue de Charenton ;

La voie Georges-Pompidou ;

L’avenue de New-York ;

L’avenue du Président-Kennedy ;

L’avenue de Versailles ;

Le boulevard Exelmans ;

Le boulevard d’Auteuil ;

L’avenue de l’Hippodrome ;

L’avenue Paul-Doumer.

பாதைகளை சுற்றி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இருந்தாலும், இந்த போக்குவரத்து இடையூறுகள் மாலை வரை நீடிக்கக்கூடும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்