Paristamil Navigation Paristamil advert login

ஈரானிய பெண்ணுக்கு பிரான்சில் சிறை!!

ஈரானிய பெண்ணுக்கு பிரான்சில் சிறை!!

13 சித்திரை 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 1053


பிரான்சில் வசிக்கும் ஈரானிய பெண் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 35 வயதுடைய Mahdieh Esfandiari எனும் அப்பெண், பயங்கரவாத சிந்தனைகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இணையத்தளமூடாக பரப்பப்படும் பயங்கரவாத சிந்தனைகளை கண்காணித்து தடுக்கும் அமைப்பான Pôle national de lutte contre la haine en ligne தெரிவித்த முறைப்பாட்டை அடுத்தே Lyon நகரில் வசிக்கும் குறித்த பெண் கைது செய்யப்பட்டார். அப்பெண் அடிப்படைவாதம், பயங்கரவாதம் குறித்த தகவல்களை இணையத்தில் பரப்பியதாகவும், இனங்கள் தொடர்பான இழிவான கருத்துக்களை இணையத்தில் பரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு கடந்த 2024, நவம்பர் 7 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டார். 

அதை அடுத்து, நேற்று ஏப்ரல் 12, சனிக்கிக்கிழமை அவருக்கு பரிஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்