பறந்து வந்த பந்தை தரையில்படாமல் கோலக்கிய ரொனால்டோ! உறைந்துபோன ரசிகர்கள்

13 சித்திரை 2025 ஞாயிறு 08:48 | பார்வைகள் : 454
அல் ரியாத் அணிக்கு எதிரான சவுதி ப்ரோ லீக் போட்டியில், அல் நஸர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அல் அவ்வல் பார்க் மைதானத்தில் நடந்த சவுதி ப்ரோ லீக் போட்டியில் அல் நஸர் மற்றும் அல் ரியாத் அணிகள் மோதின.
முதல் பாதியின் முடிவில் அல் ரியாத் (Al-Riyadh) வீரர் ஃபைஸ் செலெமனி (Faiz Selemani) கோல் (45+2) அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) துரிதமாக செயல்பட்டு கோல் அடித்தார்.
அதன் பின்னர் 64வது நிமிடத்தில் சக அணி வீரர் பாஸ் செய்த பந்து காற்றில் பறந்து வர, ரொனால்டோ அதனை தரையில் விடாமல் நேராக வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார்.
இந்த கோலினைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி, எதிரணி வீரர்களும் ஒரு கணம் உறைந்து போயினர்.
அல் ரியாத் அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததால் அல் நஸர் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.