Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் François Bayrou இன் புகழ் வீழ்ச்சி! அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தி அதிகரிப்பு!!

பிரதமர் François Bayrou இன் புகழ் வீழ்ச்சி! அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தி அதிகரிப்பு!!

13 சித்திரை 2025 ஞாயிறு 13:48 | பார்வைகள் : 409


பிரதமராக உள்ள François Bayrou இன் புகழ் தொடர்ந்து குறைவடைந்து வருவதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு, Michel Barnier இன் பதவி விலகலுக்குப் பிறகு, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனால் பிரதமராக நியமிக்கப்பட்ட François Bayrou, பொருளாதார சவால்களை சமாளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரை பெரிய மாற்றங்கள் எதையும் வழங்க தவறியதையடுத்து, அவருடைய சொந்த கட்சியில் இருந்தே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரதமராக இருந்தபோதிலும், Pau நகரின் மேயராக தொடர முடிவு செய்திருந்தார். இது, தேசிய மட்டத்தில் முழுமையான கவனம் செலுத்த தவறவிட்டுள்ளார் எனும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

குறிப்பாக Mayotte தீவில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் காலத்தில் அவர் நேரில் சென்று பார்வையிடாதது குறித்து, எதிர்க்கட்சிகள் அவரது அரசியல் ஒழுங்குமுறையை கடுமையாக விமர்சிக்கும் நிலை ஏற்பட்டது.

மேலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், அவர் 2025 ஆன  நிதி மசோதாவை நிறைவேற்ற, அரசியலமைப்பின் 49.3 ஆவது பிரிவை இருமுறை பயன்படுத்தியுள்ளார். இது ஜனநாயகச் செயல்முறைக்கு எதிரானதாக பல்வேறு அரசியல் மட்டத்தில் இருந்தும் எதிர்ப்புகள் எழும்ப தொடங்கியுள்ளது. இதனடிப்படையில், அவரது செல்வாக்கு மிகவும் கடுமையான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஏப்ரல் 9 முதல் 10 வரை மேற்கொள்ளப்பட்ட மாதாந்த வர்த்தகமானியின கருத்துக்கணிப்பின்படி, 67% பிரெஞ்சு மக்கள் பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து எதிர்மறையான கருத்தைக் தெரிவித்து உள்ளனர். இது கடந்த மாதத்தை விட மூன்று புள்ளிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்