Paristamil Navigation Paristamil advert login

Paris 8 பல்கலைக்கழகம் - ஒரு பார்வை!!

 Paris 8 பல்கலைக்கழகம் - ஒரு பார்வை!!

23 கார்த்திகை 2016 புதன் 11:00 | பார்வைகள் : 19642


பிரெஞ்சு தேசம் முழுவது இறைந்து கிடக்கின்றன பல்கலைக்கழங்கள். உலகின் தலைசிறந்த பட்டப் படிப்புக்கள் அனைத்தையும் நம் தேச பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ளது. இதோ, 120க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புக்களை கொண்டு, ஒவ்வொரு வருடமும் எண்ணற்ற பட்டதாரிகளை வெளியேற்றும் 'pÂris 8' பல்கலைக்கழககம் குறித்த சில தகவல்கள்!!
 
1969 ஆம் ஆண்டு இந்த பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது, இதன் பெயர் Centre Universitaire Expérimental de Vincennes" (CUEV) என்பதாகும். பல்கலைக்கழகம் Saint-Denis இல் அமைந்துள்ளது.
 
அப்போது ஏன் Vincennes எனும் பெயர் பல்கலைக்கழகத்தோடு ஒட்டிக்கொண்டது என்ற கேள்விக்கு, விடை 1980 வரை இப்பல்கலைக்கழகம் Vincennes நகரில் தான் இருந்தது. அதன் பின்னரே Saint-Denis க்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 
 
Saint-Denisக்கு மாற்றிய கையோடு 'Université Paris VIII' என பெயரையும் மாற்றிவிட்டார்கள். இப்பல்கலைக்கழகத்துக்கு நிறுவனர் Annick Allaigre ஆகும். நிகர மதிப்பு 113 மில்லியன் யூரோக்கள் ஆகும்.
 
தற்போது, Île-de-France க்குள் அமைந்துள்ள சிறந்த பல்கலைக்கழகமாகவும், மனிதநேயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகமாகவும் திகழ்கிறது.
 
மேலும், நூறுக்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புக்களையும் வழங்கி வரும் இந்த பல்கலைக்கழகம், உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களான UC Berkeley,  Beijing Film Academy, Boston University மற்றும் University of Berlin ஆகியவற்றோடு இணைந்து செயலாற்றி வருகிறது. இவ்வருடத்தில் இருந்து University of Rojava வுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
தத்துவஞானி Gilles Deleuze உள்ளிட்ட பல எண்ணற்ற சிறந்த ஆசியர்கள் குழாம் இங்கு படிப்பு சொல்லித்தருகிறார்கள். 
 
ஒரு தேசம் எப்போதும் கல்வியால் தான் முன்னேற்றும். பிரெஞ்சு தேசத்தையும் கல்வியால் முன்னேற்றும் Paris 8 பல்கலைக்கழகத்தை மனதார  வாழ்த்துவோம்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்