Paristamil Navigation Paristamil advert login

காணாமற்போன வீராங்கனை - தொடர் தேடல்!!

காணாமற்போன வீராங்கனை - தொடர் தேடல்!!

13 சித்திரை 2025 ஞாயிறு 09:28 | பார்வைகள் : 3218


28 வயதுடைய அனுபவம் மிக்க ஓட்டப்பந்தய வீராங்கனையான அகதே ஹிலாரியே (Agathe Hilairet) கடந்த வியாழக்கிழமை முதல் காணாமற்போயுள்ளார்.

இவர் பசிக்கெதிரான தனது போராட்டத்தையும் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் ஓடும் பாதையையும், பசிக்கெதிரான தனது பகிர்வுகளையும். இவர் தனது இஸ்டாகிராம் கணக்கில் பதிவிடுவது வழக்கம்.

Vienne மாவட்டத்தின் Vivonne பகுதியில் கடந்த 10ம் திகதி பயிற்சி ஓட்டமான Jogging சென்றவர் திரும்பி வரவில்லை.

இவரைக் காணாமையால் இவரது தந்தை வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து, ஜோந்தார்மினரின் படையணி தேடுதலை மேற்கொண்டுள்ளது.

இன்று வரை எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் தொடர்ச்சியாக 25 ஜோந்தார்மினர் இந்த விசாரணையிலும் தேடுதலிலும் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்