பரிசில் 20 வட்டாரங்கள் உருவானது எப்படி?
22 கார்த்திகை 2016 செவ்வாய் 10:47 | பார்வைகள் : 19551
பரிஸ். உலகின் மிக அழகான நகரம். காதல் தேசம். 'உலக காதலர்கள் எல்லாம் பரிசில் தேன் நிலவு கொண்டாட விரும்புவார்கள்' என கவிஞர்கள் குறிப்பிடும்... பரிசுக்குள் மொத்தம் 20 வட்டாரங்கள் என்பது உங்களுக்கு தெரிந்தே இருக்கும். சரி, இந்த 20 வட்டாரங்களும் எப்படி உருவானது என தெரியுமா??
ஒக்டோபர் 1ம் திகதி, 1795 ஆம் ஆண்டு பரிஸ் 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் 1860 ஆம் வருடம், தேவைகளின் படி , 20 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டது.
Louvre
Bourse
Temple
Hôtel-de-Ville
Panthéon
Luxembourg
Palais-Bourbon
Élysée
Opéra
Entrepôt
Popincourt
Reuilly
Gobelins
Observatoire
Vaugirard
Passy
Batignolles-Monceau
Butte-Montmartre
Buttes-Chaumont
Ménilmontant
என 20 வட்டாரங்களுக்கு பெயர் வைக்கப்பட்டது. பின்னர் தபால் குறியீட்டுக்காக ஆக 1ல் இருந்து 20 வரை இலக்கமிடப்பட்டன.. (75001 இருந்து 75020 வரை) இதை தவிர, மிக சுவாரஷ்யமான விஷயம் ஒன்றும் உள்ளது. Louvre முதலாவது வட்டாரம் அல்லவா... அதில் இருந்து ஆரம்பித்து, கடிகார முள்ளு சுழல்வது போல்.. நுளம்புத்திரி வடிவில் இவ் வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. (புகைப்படத்தை பார்க்கவும்) மூன்றாம் நெப்போலியனும், Baron Haussmann என்பவரும் சேர்ந்து இந்த வட்டாரங்களை உருவாக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள் என விக்கிப்பீடியா சொல்கிறது.