பரிஸ் : குற்றச்செயல்கள் பாரிய வீழ்ச்சி!!

13 சித்திரை 2025 ஞாயிறு 12:45 | பார்வைகள் : 1535
பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி Laurent Nuñez, இது தொடர்பில் சில தகவல்களை இன்று ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அதன்படி பரிஸ் மற்றும் அதன் மூன்று புறநகர் மாவட்டங்களில் (Hauts-de-Seine, Seine-Saint-Denis மற்றும் Val-de-Marne) வீடுகளில் இடம்பெறும் திருட்டுக்கள் கடந்த ஆறு மாதங்களில் 21.6% சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளன. பரிசில் மட்டும் 24.6% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.
அதேவேளை, பொது போக்குவரத்துக்களில் பயணிகளை தாக்கி இடம்பெறும் கொள்ளை, திருட்டு, போன்றவை கடந்த 6 மாதங்களில் 17.6% சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. பயணிகள் தாக்கப்படாமல் இடம்பெறும் கொள்ளைகள் 32% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.
'பிக் பொக்கெட்' திருட்டுக்கள் 14.6% சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளன.
பரிசில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 120,000 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.