பரிஸில் கோடை தொடக்கத்தைப் போல ஒரு வெப்பமான இரவு !!

13 சித்திரை 2025 ஞாயிறு 13:55 | பார்வைகள் : 2145
பரிஸில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரை கோடை காலத்தை போல ஒரு வெப்பமான இரவு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று காலை 7 மணிக்கு நகரத்தில் 13°C முதல் 14°C வரை வெப்பநிலை பதிவாகி இருந்தது, இது ஏப்ரல் மாதம் பரிஸில் சாதாரணமாக இருப்பதைவிட 5°C அதிகம் ஆகும்.
இது ஜூன் மாத தொடக்க வெப்ப நிலையை போன்றதாகும். சில இடங்களில் வெப்பநிலை சனிக்கிழமை இரவில் இருந்து அதிக மாற்றம் இல்லாமல் இருந்தது.
இந்த வெப்பமானது தெற்குப் பகுதிகளில் இருந்து வந்த சூடான காற்று காரணமாக ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் வெப்பமான இரவுகள் அதிகரித்து வருகின்றன.
காலநிலை மாற்றத்தால், தற்போது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களை போல வெப்பம் அதிகமாகவே காணப்படுகிறது. ஏப்ரல் மாதம் என்பது குளிர்காலத்திற்கும் மற்றும் கோடைக்காலத்திற்கும் இடையிலான மாற்றங்கள் நிகழும் காலம் என்பதால், வெப்பநிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது வழமையாகும்.