Paristamil Navigation Paristamil advert login

தெரிந்த des Buttes Chaumont - தெரியாத தகவல்கள்!!

 தெரிந்த des Buttes Chaumont - தெரியாத தகவல்கள்!!

19 கார்த்திகை 2016 சனி 09:00 | பார்வைகள் : 20022


பரிஸ் முழுவதும் பூங்காக்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் பெரும் வரலாறுகள் சம்பவங்களும் இருக்கின்றன. அதில் நமக்கெல்லாம் தெரிந்த Parc des Buttes Chaumont குறித்த தெரியாத தகவல்கள் சில இங்கே!!
 
பரிசின் 19 ஆம் வட்டாரத்தில், நகர சபைக்கு சொந்தமான 61 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள இந்த Parc des Buttes Chaumont வருடம் முழுவது திறந்திருக்கும். 
 
1867 ஆம் ஆண்டு மாவீரன் மூன்றாம் நெப்போலியன் நினைவாக  Jean-Charles Alphand என்பவர் வடிவமைத்த பூங்கா தான் இது. (இவரை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்... பரிசுக்குள் பல பூங்காக்களை உருவாக்கியவர் இவர்) ஆரம்பித்த நாள் தொட்டு இதுவரை எக்காரணங்களுக்காகவும் பூட்டப்படவில்லை இந்த பூங்கா!
 
எடுக்கப்பட்ட சிறு ஆய்வு ஒன்றில், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் சராசரியாக 1.30 மணிநேரம் இங்கு செலவிடுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பூங்காவில் 5.5 கிலோமீட்டர்கள் பெரு வீதியும், 2.2 KM ஒழுங்கைகளும் உள்ளது. மேலும், பரிசில் அமைந்துள்ள மிகப்பெரிய பூங்காக்களுள் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது.  
 
இத்தாலியில் உள்ள Temple of Vesta கோயிலின் வடிவத்தில் உருவாக்கப்பட்ட Temple de la Sibylle எனும் ஒரு பகுதி இந்த பூங்காவில் உள்ளது. அதிகம் பேரால் பார்வையிடப்படுவதும், இந்த பூங்காவின் 'ஹைலைட்'டாக காணப்படுவதும் இதுவாகும்.
 
சார்லி எப்தோ மீது தாக்குதல் நடத்திய 'குவாச்சி' சகோதரர்கள், இந்தப் பூங்காவில் தான் தினமும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும், இந்த பூங்காவின் இதயமாக, செயற்கையாக உருவாக்கப்பட்ட குளம் ஒன்றும் உள்ளது. 1.5 கெஹ்டேயர் நிலப்பரப்பை கொண்டுள்ளது இந்த குளம். அதேபோல் 63 மீட்டர் நீளமுள்ள தொங்குபாலம் ஒன்றும் உள்ளது. 
 
இவ்வளவும் போதாதா அட்டகாசமாக உங்கள் நேரத்தை செலவிட?? வாருங்கள்... ஒருதடவை சென்று பார்த்துவிட்டு வரலாம்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்