Paristamil Navigation Paristamil advert login

"வாழ்நாள் தவறிழைத்துள்ளார்!" - மக்ரோன்சைச் கடிந்த பெஞ்சமின் நெத்தன்யாஹு!

14 சித்திரை 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 1616


பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அண்மையில் தெரிவித்திருந்தார். 'மக்ரோன் வாழ்நாள் தவறிழைத்துள்ளார்' என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு தெரிவித்துள்ளார். 

நேற்று ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை அவர் X சமூகவலைத்தளமூடாக சில தகவல்களை வெளியிட்டார். அதன்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், "ஜனாதிபதி மக்ரோன் பாலஸ்தீன அரசாங்கத்தை முன்மொழிகிறார். அவர் இழைத்த வாழ்நாள் தவறு அது." என தெரிவித்தார்.

நெத்தன்யாஹுவின்  மகன் Yair Netanyahu அவரது X தளத்தின் ஊடாக தகாத வார்த்தை ஒன்றை பயன்படுத்தி ஜனாதிபதி மக்ரோனை திட்டியிருந்தார். "அனைத்து மக்களுக்கும் தங்களது கருத்தைச் சொல்ல உரிமை உள்ளது. ஆனால் மக்ரோன் ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர். அவர் அவ்வாறு சொல்லுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என சீண்டியிருந்தார்.

அதை அடுத்து, இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்