Paristamil Navigation Paristamil advert login

அமைச்சர் வேலு சர்ச்சை பேச்சு: பா.ஜ., கடும் கண்டனம்

அமைச்சர் வேலு சர்ச்சை பேச்சு: பா.ஜ., கடும் கண்டனம்

14 சித்திரை 2025 திங்கள் 07:03 | பார்வைகள் : 508


அமைச்சர் பொன்முடியை அடுத்து, கூட்டம் ஒன்றில் அமைச்சர் வேலு பேசிய வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.

இது தொடர்பாக, பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: 'கோவிலுக்கு போகிறோம்; நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தமிழில் பாடுகிறோம். சிவன் கோவிலிலும், வைஷ்ணவ கோவிலிலும் போய், 'சோலி கே பீச்சே' என பாட முடியுமா? நல்லா யோசனை பண்ணு. அப்புறம் எதற்கு ஹிந்தி படிக்கணும்' என, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசி உள்ளார்.

பொன்முடி பெண்களை அவமானப்படுத்தி பேசிய நிலையில், அமைச்சர் வேலு, 'கோவிலுக்கு போய், ரவிக்கைக்கு பின்னால்' என, பெண்கள் மற்றும் கோவில்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். தமிழக பெண்கள், தி.மு.க.,வை விரட்டி அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அமைச்சர் வேலு மீதும், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்