Paristamil Navigation Paristamil advert login

கலைகளின் சங்கமம் - Musée Rodin!!

 கலைகளின் சங்கமம் - Musée Rodin!!

18 கார்த்திகை 2016 வெள்ளி 13:53 | பார்வைகள் : 20097


நேற்றைய தினம் புகழ்பெற்ற பிரெஞ்சு சிற்பி Auguste Rodin குறித்து ஆச்சரியமான தகவல்கள் சொன்னோம். சொன்னதோடு.. அவர் பெயரில் ஒரு அருங்காட்சியகம் கூட உள்ளது என சொல்லியிருந்தோம். வாருங்கள்.. கலைகளின் சங்கமமாகிய Musée Rodin குறித்து தெரிந்துகொள்வோம். 
 
1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Auguste Rodin இறக்க, அவரின் சிற்பங்கள் ஓவியங்கள் கொண்டு 1919 ஆம் ஆண்டு திறப்பட்டத்து Musée Rodin. அதன் பின்னர் பல்வேறு ஓவியர்களின் ஓவியங்கள், சிலைகள் என பல கலைப்பொருட்கள் குவிந்தன. இன்று இவ் அருங்காட்சியகத்தில் 6,000 சிலைகள், 7,000 கலைப்பொருட்கள், 8,000 ஓவியங்கள், 8,000 புகைப்பட தொகுப்புக்கள் குவிந்து உள்ளன. 
 
Musée Rodin பரிசின் Villa des Brillants இல் வசிக்கும்போது,   Hôtel Biron ஐ, தனது கூடமாக பயன்படுத்தினார். இங்கே வைத்து ஓவியங்கள் வரைவதும், சிறங்கள் செதுக்குவதும் என நீண்ட காலம் Hôtel Biron ஐ தனது வேலைத்தளமாக பயன்படுத்தினார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை...தன்னுடைய சிலைகள் ஓவியங்களை Hôtel Biron க்கே அன்பளிப்பாக கொடுத்துவிட்டார். பின்னர் அவர்கள் அந்த கட்டிடத்தையே, Musée Rodin திறமைக்கான பரிசாக கொடுத்துவிட்டார்கள். Musée Rodin அங்கேயே உருவானது. 
 
Auguste Rodinஇன் மிக உன்னதமான கலைச்சிற்பங்களான  The Thinker, The Kiss மற்றும் The Gates of Hell இங்கே காட்சிக்கு உள்ளன. 
 
சிறங்களையும் ஓவியங்களையும் ரசிக்க உங்களுக்கு ஒரு நாள் போதுமா என தெரியவில்லை, ஆனால் ஒரு நாளாவது இங்கு தவறாமல் சென்று வரவும். 
 
வருடத்துக்கு 7 இலட்சம் பார்வையாளர்கள் குவியும் அருங்காட்சியகம் Hôtel Biron, 79, rue de Varenne, 75007 Paris எனும் முகவரியில் அமைந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்