எதிர்பாராத தொகையில் விற்பனையான ஒலிம்பிக் தீபம்!!
.jpg)
14 சித்திரை 2025 திங்கள் 07:56 | பார்வைகள் : 1030
தொண்டு நிறுவனம் ஒன்று நேற்று ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக் தீபம் உள்ளிட்ட சில பொருட்களை ஏலத்தில் விட்டது. இதில் எதிர்பார்த்திராத பெரும் தொகைக்கு ஒலிம்பிக் தீபம் விற்பனையானது.
ஒலிம்பிக் தீபம், ஆடைகள், சிறிய பொம்மைகள் உள்ளிட்ட சில பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. அதில் வரும் வருமானம் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், €10,000 யூரோக்களுக்கும் குறைவான மதிப்புடைய பொருட்கள் மொத்தமாக €228,556 யூரோக்களுக்கு விற்பனையானது.
2024 ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்திய பல பொருட்கள் முன்னதாகவே ஏலத்தில் விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.