மட்டக்களப்பில் தமிழ் புத்தாண்டில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமா உயிரிழப்பு
14 சித்திரை 2025 திங்கள் 11:02 | பார்வைகள் : 10516
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று (14) அதிகாலை, காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 1 மணியளவில், வீட்டு முற்றத்தில் நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடி விளையாடிக் கொண்டிருந்த 31 வயதுடைய இராசதுரை சசிகரன் என்பவர், சத்தம் கேட்டு வீட்டு வாசலுக்கு வந்தபோது, எதிர்பாராதவிதமாக யானையின் தாக்குதலுக்கு உள்ளானார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
தாக்குதலில் படுகாயமடைந்த சசிகரனை, உறவினர்கள் உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை 4:30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
சசிகரனின் உடல், உடற்கூறு பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற இந்த மரணச் சம்பவத்தால், 37ஆம் கிராமப் பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan