Paristamil Navigation Paristamil advert login

Auguste Rodin எனும் அற்புத மனிதர்!

Auguste Rodin எனும் அற்புத மனிதர்!

17 கார்த்திகை 2016 வியாழன் 10:32 | பார்வைகள் : 19803


உங்களுக்கு விசாலமான கற்பனைத் திறமை இருக்கிறதென்றால்... அதை 'கலை'யாக உருவகம் செய்ய தெரியுமென்றால்... பின்நாட்களின் நீங்கள் வரலாறுகளில் இடம்பெறுவீர்கள் என அர்த்தமாகும். இதோ... Auguste Rodin
போல்!
 
தன் அதீத கற்பனைகளையெல்லாம் சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும் உருவாக்கித்தள்ளியவர். இவரின் முழுப்பெயர் François-Auguste-René Rodin. 1840 ஆம் ஆண்டு, நவம்பர் 12ம் திகதி பரிசில் பிறந்த இவரின் பெயரில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. Auguste Rodin சிறுவயது முதலே பாரம்பரியம் பேணும் கல்விக்கூடத்தில் படித்தார். புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் இவரின் கற்பனைச்சிறகை விரிக்க... ஓவியங்கள் சிற்பங்கள் என செதுக்க ஆரம்பித்தார். 
 
இவரின் ஓவியங்கள் நவீனமயமாகவும் அதேவேளை புராணங்களை பிரதிபலிப்பவையாகவும் அமைந்தன. மனித உடல்களை அத்தனை தத்ரூபமாக சிற்பங்களாக வடித்தார். முதன் முதலாக 1877 ஆம் ஆண்டு, The Age of Bronze எனும் சிற்பத்தை உருவாக்கினார். தற்போது இந்த சிலைக்கு இருக்கும் புகழ் அப்போது கிடைக்கவில்லை. இருந்தாலும் தன் வேலையில் நிதானமாகவும் திறம்படவும் செயல்பட்டார். தற்போது இச்சிலை பெர்லின் நகரின் அட்லீ தேசிய அருங்காட்சியகத்தில் பார்வைக்கு உள்ளது.
 
தலையும் இல்லாமல் கைகளும் இல்லாமல் ஒரு மனித உருவம் நடக்கிறது.... இதை 
The Walking Man எனும் பெயரில் சிற்பமாக வடித்தார். உடலின் அசைவுகள், வளைவு நெளிவுகள் என அச்சொட்டாக வடிவமைத்த இந்த சிலை, பல அறிஞர்களால் வெகுவாக பாராட்டப்பட்டதாகும். சிக்காகோவின் Art Institute of Chicago அருங்காட்சியகத்தில் உள்ளது. 
 
அதெல்லாம் சரி... இச்சிலைகள் எல்லாம் சிக்காகோவிலும், பெர்லினிலும் இருந்தால்... பிரான்ஸ் வாசிகளான நாம் எங்கு போவது??!!  நாளை சொல்கிறோம்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்