அமைச்சர்கள் மீது கொலை வழக்கு!!

14 சித்திரை 2025 திங்கள் 12:50 | பார்வைகள் : 813
முன்னாள் பிரதமரும் தற்பாதைய கல்வி அமைச்சருமான எலிசபெத் போர்ன் மீதும், தொழிலாளர் மற்றும் சுகாதார அமைச்சரான கத்ரின் வோத்ரன் மீதும், சுகாதாரம் மற்றும் வைத்தியத்திற்கான அலுவல்கள் அமைச்சின் யன்னின் நொய்தர் மீதும் கொலை வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மோசமான வேலைத்தரம் மற்றும் அதியுச்ச பணி அழுத்தம் காரணமாக செவிலியர்கள். தாதியர்கள் உட்பட 19 பேர் மருத்துவத் துறையில் தற்கொலை செய்துள்ளனர்.
மேற்கண்ட மூன்று அமைச்சர்கள் மீதும் «மன அழுத்தம், வேண்டுனெறே செய்யாத கொலை, தற்கொலைக்குத் தூண்டியமை, மற்றும் அவர்களின் வாழ்வினை அழித்தமை» போன்ற குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு குடியரசு நீதிமன்றத்தில் (Cour de justice de la République) இன்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.