பெரும்பான்மை இல்லாத பட்ஜெட் 2026 : மீண்டும் சட்டம் 49.3ஐ பயன்படுத்த பிரதமர் Bayrou முயற்சி?

14 சித்திரை 2025 திங்கள் 14:22 | பார்வைகள் : 811
அரசாங்கம் 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 40 பில்லியன் யூரோக்களை அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ஆனால் பிரதமர் பிரான்சுவா பெய்ரூவுக்கு (François Bayrou) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் இடதுசாரி, வலதுசாரி மற்றும் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும்.
மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு குறைவாக இருப்பதால், அவருக்கு இதை நிறைவேற்றுவது என்பது சவாலான விடயமாக உள்ளது. 2026 பட்ஜெட்டை மக்கள் உடன் சேர்ந்து உருவாக்கும் முயற்சியில் உள்ளார்.
அரசாங்கம் அதிக வருமானம் பெறுபவர்களுக்கான வரியை நீடிக்க முடிவு செய்துள்ளது. இது இடதுசாரி கட்சியை பொறுத்தவரையில் சரியானதாக இருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால், பாராளுமன்றத்தின் அனுமதி இன்றி பட்ஜெட்டை நிறைவேற்ற 49.3 என்ற சட்டத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
எதிர்கட்சிகள் அரசு மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரலாம் எனவும் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் முடிவும் எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.