Paristamil Navigation Paristamil advert login

உலகின் அதிக விலையுள்ள 'வைன்' - பிரான்ஸ் வசம்!!

 உலகின் அதிக விலையுள்ள 'வைன்' - பிரான்ஸ் வசம்!!

16 கார்த்திகை 2016 புதன் 13:30 | பார்வைகள் : 19184


பிரெஞ்சு தேசம் வைனுக்கு பெயர் போனது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் பிரான்ஸ் மட்டும் தானா என கேட்டால் நிச்சயம் இல்லை, எமக்கு சிம்ம சொப்பனமாய் எதிரி அருகிலேயே இருக்கிறது. 'ஜெர்மனி' 
 
வைன் தயாரிப்புக்களில் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் எப்போதும் போட்டா போட்டிதான். ஆக குறைந்த விலையில் இருந்து, அதிக விலையுள்ள வைன் வரை உற்பத்திசெய்து வருகிறது பிரான்சும், ஜெர்மனியும். சரி.. வைன்களில் அதிக விலையுள்ள வைனை எந்த நாடு தயாரிக்கிறது??? சாட்சாத் நம் பிரான்சே தான்!!
 
Romanee-Conti 
 
எனும் புகழ்பெற்ற வைன் தான் உலகின் அதிக விலையுள்ள வைனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்ட ஏலத்தில் 77 போத்தல் வைன்கள் $750,609 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போனது. அதாவது ஒரு வைன் போத்தலின் விலை 9,748 அமெரிக்க டொலர்கள் படி. 'விண்டேஜ்' வைன் என அழைக்கப்படும்  பழமையான வைன் (1990 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது) 3 போத்தல்கள் 72,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது 2013இல். 
 
ஏலத்தில் அதிக விலை போனது தவிர்த்து, 13,867 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒரு வைன் போத்தலும் Romanee-Conti இடம் உண்டு. இரண்டாவது இடத்தில் ஜெர்மனியின் Egon Muller-Scharzhof Scharzhofberger Riesling Trockenbeerenauslese (அட வைன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தான்... பயப்பிடாமல் படியுங்க) நிறுவனம் இருக்கிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்