புதிய சிறைச்சாலைகளை உருவாக்க முயலும் நீதியமைச்சர்!

14 சித்திரை 2025 திங்கள் 13:58 | பார்வைகள் : 778
பிரான்சில் நிலவும் நிறைச்சாலை நெருக்கடிகளை நீக்க புதிய கிறைச்சாலை ஒன்றை உருவாக்கம் திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லது ஊற்கனவே உள்ள சிறைச்சாலைகளில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தொகுதிகளை ( modules préfabriqués) வைத்து18 மாதங்களிற்குள் 3000 புதிய சிறையறைகளை உருவாக்க முடியும் என பிரான்சின் நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மனன் தெரிவித்துள்ளார்.
2026 முதல் 2027 இற்குள் 15.000 சிறையறைகள் அமைக்கப்பட்டு, குறைந்தகாலத் தணடனைக் குற்வாளிகளிற்காக அது நடைமுறைப்படுமத்தப்படும் எனவும், மிகுதி 15000 இடங்கள் மற்றைய கைதிகளிற்காக உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.