பிரியங்கா சோப்ரா அட்லி படத்தில் நடிக்க மறுத்தாரா ?

14 சித்திரை 2025 திங்கள் 15:50 | பார்வைகள் : 638
அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை படக்குழுவினர் அணுகியதாகவும், ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் அடுத்த படம் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் நிலையில், இந்த படம் பான் இந்தியா மட்டுமின்றி பான்-வேர்ல்ட் படமாகவும் உருவாகும் என்பதால், இந்தியா முழுவதும் பரிச்சயமான அல்லது ஹாலிவுட் நடிகையை நாயகியாக தேர்வு செய்ய வேண்டும் என்று அட்லி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஜான்வி கபூர் மற்றும் சமந்தா ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர். ஆனால் அதற்கு முன்பே பிரியங்கா சோப்ராவிடம் படக்குழு அணுகியதாகவும், ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில், மகேஷ் பாபு நடிப்பில் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒப்பந்தமாகும் போது, எப்போது படப்பிடிப்புக்கு அழைத்தாலும் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் தேவையில்லாத பிரச்சனை வேண்டாம் என்பதற்காகவே அட்லி படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜான்வி கபூர் அல்லது சமந்தாவை நாயகியாக தேர்வு செய்யவாரா? அல்லது ஹாலிவுட் பிரபலங்களை நாயகியாக அட்லி தேர்வு செய்வாரா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.