சூரி ஹீரோவாக மீண்டும் சாதிப்பாரா?

14 சித்திரை 2025 திங்கள் 16:01 | பார்வைகள் : 429
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சூரி, கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகி வருவதை அடுத்து, அவர் நடித்த இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடித்த ’விடுதலை’ முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை அடுத்து ’கருடன்’, ’விடுதலை 2’ ஆகிய படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த நிலையில், தற்போது அவர் ’படவா’, ’ஏழு கடல், ஏழு மலை’ ’மாமன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் ’மாமன்’ படத்தின் ரிலீஸ் தேதி மே 16 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களும் வெளியாகியுள்ள நிலையில், அந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சூரியுடன் ராஜ்கிரண், ஐஸ்வர்யா, ஸ்வாசிகா, ஜெயபிரகாஷ், பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹேசம் அப்துல் வகாப் இசையில் உருவாகும் இந்த படத்தை பிரசாந்த் என்பவர் இயக்கியுள்ளார். ’மாமன்’ திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதமே உள்ளதால், விரைவில் புரமோஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.