Paristamil Navigation Paristamil advert login

பரிசுக்குள் ஒரு தாஜ்மஹால்! - வாங்க தெரிந்துகொள்வோம்!!

 பரிசுக்குள் ஒரு தாஜ்மஹால்! - வாங்க தெரிந்துகொள்வோம்!!

11 கார்த்திகை 2016 வெள்ளி 12:23 | பார்வைகள் : 19497


தாஜ்மாஹாலில் முதலில் ஈர்ப்பதே அதன்  அழகான தோற்றம் தான். அதேபோல் நம் பரிசிலும் ஒரு தாஜ்மஹால் உள்ளது. எங்கே...?? வாங்க தெரிந்துகொள்வோம். 
 
Sacré-Cœur என அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் தான் அது. பார்ப்பதற்கு தாஜ்மஹால் போன்று காட்சியளிக்கும் இதன் பின்னால் சிலபப வரலாறுகள் உண்டு. 
 
1919 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயம் இது. நாடுமுழுவதும் பல தேவாலயங்களை வடிவமைத்த, கட்டிடகலைஞர் Paul Abadie என்பவர் வடிவமைத்த தேவாலயம் தான் இது!
 
உண்மையில், 1875 ஆம் ஆண்டு கட்டிடப்பணிகள் ஆரம்பித்து, பின்னர் 1914 ஆம் ஆண்டு வேலைகள் முடிக்கப்பட்டு, 1919 ஆம் ஆண்டு பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டது. இடையில், முதலாம் உலகப்போரின் போது சிலபல சேதங்களை கட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த தேவாலயத்தை கட்டுவதற்கு 77 கட்டிட கலைஞர்கள் போட்டியிட்டனர்... அவர்களில் மிக அழகான மாதிரி படத்தை உருவாக்கி இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டார் Paul Abadie.
 
இந்த தேவாலயத்தின் உள் பக்க கட்டிட வேலைகள் முடிப்பதற்கே முழுதாக ஆறு வருடங்கள் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
துயரம் என்னவென்றால், மாதிரி படத்தை உருவாக்கி, அனைத்து 'ப்ளான்'களையும் முடித்து வேலைகள் ஆரம்பித்த சில வருடங்களில் Paul Abadie இறந்துபோனார். பின்னர் அதே 'ப்ளான்'னில் வெவ்வேறு கட்டிட கலைஞர்கள் வேலைகளை தொடர்ந்தார்கள். 
 
தேவாலயத்தை கட்டி முடிக்க 7 மில்லியன்  franc தேவைப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற்றுக்கொண்ட பணம் அது.
 
தேவாலயம்  35 Rue du Chevalier de la Barre, 75018 Paris எனும் முகவரியில் உள்ளது. ஒருதடவை சென்று வாருங்களேன்!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்