அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள €39 யூரோக்கள் கட்டணம்..??!!

14 சித்திரை 2025 திங்கள் 18:01 | பார்வைகள் : 2411
அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள €39 யூரோக்கள் கட்டணம் அறவிடப்படுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
ஆனால் அரசாங்கம் அப்படியான அறிவித்தல் எதனையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அண்மையில் முளைத்துள்ள ஒரு இணையத்தளத்தில் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும், எனவும் 48 மணிநேரங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள €39 யூரோக்கள் செலுத்தினால் போதும் என விளம்பரப்படுத்துகிறது.
ஆனால் அது போலியானது எனவும், அரசாங்கத்தின் இணையத்தளம் போன்றே காட்சியளிக்கும் குறித்த தளம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணையவழியாக பணம் செலுத்த நேரும் போது குறித்த இணையத்தளம் குறித்த உண்மைத்தன்மை குறித்து அறிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.