பரிஸ் உடற்பயிற்சி கூடத்தில் விஷம் பரவி ஒருவர் பலி, ஆபத்தான நிலையில் மற்றொருவர்!!

14 சித்திரை 2025 திங்கள் 20:56 | பார்வைகள் : 818
ஏப்ரல் 14, திங்கட்கிழமை, பரிஸ் 11 ஆவது வட்டாரத்தில் உள்ள boulevard Voltaire இல் அமைந்துள்ள "On Air" உடற்பயிற்சி கூடத்தில் நைட்ரஜன் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஒரு பெண் ஊழியர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் வாடிக்கையாளர் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைத் தகவல்களின்படி, Cryotherapie சிகிச்சைக்கான தொட்டிகளில் இருந்து நைட்ரஜன் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இது, திங்கள்கிழமை உடற்பயிற்சி கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட குழாய் திருத்த பணிகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.