பிரான்சின் தூதரக அதிகாரிகள் நாடுகடத்தப்பட்டனர்!

14 சித்திரை 2025 திங்கள் 21:00 | பார்வைகள் : 6212
அல்ஜீரியத் தாதரக அதிகாரி ஒருவர் பிரெஞ்சு மண்ணில் «ஆட்கடத்தல் மற்றும் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்தல்» குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை தெரிந்த செய்தியே!
இவரை உடனடியாக விடுவிக்கும்படி அல்ஜீரிய கோரியும் அவர் குற்றவாளி என்பதால் பிரான்ஸ் விடுவிக்வில்லை.
இதனால் அல்ஜீரியாவில் உள்ள பிரெஞ்சுத்தூதரகத்தின் 12 அதிகாரிகள் நடுகடத்தப்பட்டுள்ளனர்.
தங்களது இறையான்மையைக் காப்பதற்காக தாங்கள் இந்த நவடிக்கையில் ஈடுபட்டதாக அல்ஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த இராஜதந்திர உறவு முறிவிற்கு பிரான்சின் உள்துறை அமைச்சர் பேர்னார் ரத்தையூ தான் காரணம் எனவும் அல்ஜீரிய அரசாங்கம் கண்டித்துள்ளது.
இரு நாட்டு உறவிலும் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.