Paristamil Navigation Paristamil advert login

தெரிந்த Luxor Obelisk! - தெரியாத தகவல்கள்!!

தெரிந்த Luxor Obelisk! - தெரியாத தகவல்கள்!!

9 கார்த்திகை 2016 புதன் 11:29 | பார்வைகள் : 19613


நினைவுச்சின்னங்கள் எப்போதும் ரசிக்கத்தக்கவை. தன்னுள்ளே பல கதைகளை அடக்கி, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக காட்சியளிக்கும். நம் தேசம் முழுவதும் எண்ணற்ற நினைவுச்சின்னங்கள் உண்டு. அதில் இன்று நாம் Place de la Concorde இல் அமைந்துள்ள Luxor Obelisk குறித்து சில தகவல்களை பார்க்கலாம்!
 
குத்துக்கல்லாட்டம் இருக்கியேம்மா என சொல்லத்தோணும் இந்த Luxor Obelisk, 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஈஃபிள் கோபுரத்தின் மேல் ஏறி நின்று பார்த்தால், எதிரே ஒற்றை ஆளாய் நின்றிருக்கும் இந்த Luxor Obelisk.
 
1755 ஆண்டு, Ange-Jacques Gabriel என்பவரால் 'மாதிரி படம்' வரையப்பட்டு.. பின்னர் 1772இல் கட்டி முடிக்கப்பட்டது இந்த Luxor Obelisk.
 
21.3 ஏக்கர் நிலப்பரப்பு, Place de la Concordeக்கு சொந்தமானது. அதன் மத்தியில் அமைந்துள்ளது தான் Luxor Obelisk. தலைநகரில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நினைவுச்சின்னம் ஆகும். (நிலப்பரப்பில்)
 
மொத்தம் 23 மீட்டர் உரயத்தையும் 220 தொன் எடை கொண்டது இந்த நினைவுச்சின்னம். எகிப்த்திய கலாச்சாரம் போன்று, மிக 'க்ளாசிக்'காக கட்டப்பட்டுள்ளது. 
 
இந்த பகுதி Louis XV எனும் மன்னர் காலத்தில் கட்டப்பட்டு Palace Louis XV என அழைக்கப்பட்டது,  பிரெஞ்சு புரட்சியின் பின்னர் அது, Place de la Concorde என பெயர் மாற்றம் கொண்டது. 
 
இந்த Luxor Obelisk மேல் வைக்கப்பட்டிருக்கும் தூபி 3,500 ஆண்டுகள் பழமையானது. பரிசில் இருக்கும் மிக பழமையான நினைவுச்சின்னமும் இதுவாகும்.
 
Luxor Obelisk சின்னத்துக்கு தெற்கு பக்கமாய், (பின்புறம்) சென் நதி பாய்கிறது. Luxor Obelisk வருவதற்காகவே சென் நதிமேல் மேம்பாலம் ஒன்றும் உள்ளது.
 
பார்ப்பதற்கு ஒரு பென்சிலை செங்குத்தாக நிற்க வைத்தது போல் காட்சியளிக்கும் இந்த Luxor Obelisk க்கு பின்னால் இவ்வளவு இருக்கிறதா என தோன்றுகிறதா??

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்