Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க மக்ரோன் தீவிர முயற்சி..! - பேச்சுவார்த்தைக்கு தயார்!!

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க மக்ரோன் தீவிர முயற்சி..! - பேச்சுவார்த்தைக்கு தயார்!!

15 சித்திரை 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 774


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகாரம் பெற்ற ஒன்றாக மாற்றுவதற்குரிய முன்மொழிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். உடனடியாகவே இஸ்ரேல் சார்பு நாடுகளுடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பிரான்சும் இஸ்ரேல் சார்பான நாடாக இருக்கும் நிலையில், யுத்தத்தை நிரந்தரமாக நிறுத்த இந்த முடிவை எட்டியதாக மக்ரோன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் “பேச்சுவார்த்தைக்கு தயார்’ எனும் அறிவிக்கை மக்ரோன் நேற்று ஏப்ரல் 14, திங்கட்கிழமை வெளியிட்டார். “நாங்கள் ஒரு தொடர் பேச்சுவார்த்தை திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் திட்டம் தொடர்பாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.” என தெரிவித்தார்.

இம்மானுவல் மக்ரோன் சில நாட்கள் முன்பு காஸா பகுதிக்கு அருகே உள்ள ஒரு நகருக்கு பயணித்திருந்தார். அங்கு நிலமைகளை பார்வையிட்டிருந்தார். அதன் பின்னர் மக்ரோனது பர்வை மாறியுள்ளதாக அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையில் ‘ஹமாஸ்’ அமைப்புக்கு எந்த கதாப்பாத்திரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்