முன்னைய எஜமான்களை சிக்க வைத்த பிள்ளையான் - சுமந்திரன்

15 சித்திரை 2025 செவ்வாய் 08:21 | பார்வைகள் : 397
தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்படடுள்ள, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தனது முன்னைய எஜமான்களை (முன்னாள் எம்.பிக்கள்) சிக்க வைக்கும் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
முன்னாள் அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதாகி மூன்று மாதங்களிற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் பிள்ளையான் தனது முன்னைய எஜமான்களை சிக்க வைக்கும் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாக அனுர அரசு ஆதரவு ஊடகங்கள் பரபரப்பினை வெளிப்படுத்தியுள்ளன.
மேலும், யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகலாமென்ற ஊகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
1996ம் ஆண்டு முதல் வடமராட்சி கிழக்கின் கரையோர கிராமங்களை இலக்கு வைத்து பாரிய மணல் கொள்ளை மகேஸ்வரி நிதியத்தின் பேரில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு துறைக்கு தற்போதைய ஜனாதிபதி நியமிக்கப்பட்டிருந்தார்.
தற்போது அவர் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்துள்ள நிலையில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கைதாகலாம் என .ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.