Paristamil Navigation Paristamil advert login

தெரிந்த Champs-Élysées - தெரியாத தகவல்கள்!

தெரிந்த Champs-Élysées - தெரியாத தகவல்கள்!

6 கார்த்திகை 2016 ஞாயிறு 10:59 | பார்வைகள் : 19879


உலகின் பல மதிப்புக்குரிய வீதிகளில் Champs-Élyséesயும் ஒன்று.  இது வெறும் வீதியல்ல... அடையாளம். பெருமை. நம் கண்களில் அடிக்கடி தென்படும் Champs-Élysées குறித்த சில முக்கிய தகவல்கள் இன்றைய பிரெஞ்சு புதினத்தில்!!
 
எட்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த Champs-Élysées வீதியில் நீளம் 1.9 கிலோமீட்டர்கள். மிக துல்லியமாக சொல்வதென்றால்   1,910 மீட்டர்கள். அகலம் 230 அடி, அதாவது 70 மீட்டர்கள். 
 
இந்த Champs-Élysées, Place de la Concorde வில் ஆரம்பித்து... Place Charles de Gaulle வில் வந்து முடிகிறது. இதன் ஒரு பகுதியில்  Arc de Triomphe கம்பீரமாய் நின்றிருக்கிறது. ( Arc de Triomphe  குறித்த ஆச்சரியமான தகவல் ஒன்று நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் நீங்கள் படிக்கலாம்) 
 
பிரெஞ்சு தேசிய தினம் அன்று இராணுவ வீரர்களின் அணிவகுப்பு இங்கே தான் இடம்பெறும். ஜனாதிபதி உட்பட பல அரசியல் தலைவர்கள், பெரும்புள்ளிகள் பலர் சங்கமிக்கும் வீதி இது!! Tour de France சைக்கிள் ஓட்டப்போட்டியின் வெற்றி இலக்கு இங்கே தான் வைக்கப்படும். வெற்றியாளரை இந்த வீதி தான் தீர்மானிக்கும்! 
 
இந்த வீதிக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு. "la plus belle avenue du monde" - என்றால் உலகின் மிக அழகான வீதி என அர்த்தம்! உண்மைதான்! 
 
1852 இல், இந்த வீதியில் மாவீரன் Napoleon Bonaparteவின் சிலை (குதிரை மேல் இருப்பது போன்று) நிறுவப்பட்டு பின்னர் இடிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
 
அன்று 14, June 1940. இரண்டாம் உலகப்போரில், பிரெஞ்சு அரசு ஜெர்மனியிடம் சரண் அடைகிறது. அப்போது ஜெர்மனிய வீரர்கள் Arc de Triomphe முன்னால் நின்று இராணுவ அணிவகுப்பு செய்தார்கள். எவ்விதத்தில் பெருமைகொள்வதென தெரியவில்லை. 
 
இந்த வீதிக்கு பெருமை சேர்க்கும் மற்றுமொரு விடயம்,  இங்குள்ள கடைகள். கடைகள் என்றால் Louis Vuitton, Hugo Boss, Lancel, Guerlain, Lacoste, Hôtel de la Païva, Élysée Palace, Fouquet's போன்ற 'லக்ஸரி' கடைகள். Adidas, Benetton, the Disney Store, Nike, Zara, H&M, Cartier, Bel Air Fashion, Toyota, Gap, Sephora போன்ற கடைகளும் இங்கே பிரசித்தம்.
 
வருடா வருடம் நவம்பரில் இருந்து ஜனவரி மாத ஆரம்பம் வரை விதம்விதமாக மின் விளக்குகளால் விழாக்கோலம் பூண்டிருக்கும் Champs-Élysées,
 
அது தவிர, பல சிறப்பு நிகழ்ச்சிகள், புதுவருட இரவில் சிறப்பு இசை நிகழ்ச்சிகள், உதைப்பந்தாட்ட போட்டிகளின் வெற்றி களிப்பாட்டங்கள் என அடிக்கடி 'ஸ்பெஷல்' ஆகும் இந்த Champs-Élysées.
 
பரிசுக்கும், பிரான்சுக்கும் பெருமை சேர்க்கும் இந்த வீதியை கடக்கும் போது, பெருமையாய் உணருங்கள்!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்