விண்ணைத் தொட்ட சிங்கப்பெண்கள் - புதிய சாதனையை படைப்பு!

15 சித்திரை 2025 செவ்வாய் 09:58 | பார்வைகள் : 337
அமெரிக்காவில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்து வெற்றியுடன் திரும்பி புதிய சாதனையை படைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சி உச்சத்தை தொட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் விண்வெளி சுற்றுலாவுக்காக தனியார் விண்வெளி மையங்களும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் அமேசன் நிறுவனர் ஜெஃப் பெசோசின் ப்ளூ ஆரிஜின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை சமீபத்தில் ப்ளூ ஆரிஜின் முழுவதும் பெண்கள் அடங்கிய ஒரு குழுவை விண்வெளி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டது.
அதன்படி ஜெப் பெசோசின் வருங்கால மனைவி லாரன் சான்செஸ், பாப் பாடகி கேட்டி பெரி, நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே உள்ளிட்ட 6 பெண்கள் விண்வெளிக்கு பயணம் செய்தனர்.
நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் புறப்பட்ட அவர்கள் விண்வெளிக்குள் சென்று சில மணி நேரங்களை கழித்து பத்திரமாக பூமியை வந்தடைந்துள்ளனர். இந்த பயணம் மூலம் விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் மட்டுமே விண்வெளி சென்று திரும்பிய பயணமாக இது சாதனை படைத்துள்ளது.