■■ சிறைச்சாலைகள் மீது தாக்குதல்!!

15 சித்திரை 2025 செவ்வாய் 10:33 | பார்வைகள் : 1196
பிரான்சில் உள்ள இரண்டு சிறைச்சாலைகள் மீது தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
Villepinte மற்றும் Nanterre நகர சிறைச்சாலைகளின் வாகன தரிப்பிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
ஏப்ரல் 14, நேற்று திங்கட்கிழமை இரவு இத்தாகுதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. Villepinte (Seine-Saint-Denis) சிறைச்சாலையிலும், Nanterre (Hauts-de-Seine) சிறைச்சாலையிலும் மகிழுந்துகள் எரியூட்டப்பட்டுள்ளன.
இரவு 10 மணி அளவில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. Melun (Seine-et-Marne) நகர குற்றவாளிகள் தடுப்பு மையத்திலும் வாகனம் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளன.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.