கிரையோதெரபி என்றால் என்ன? - பெண்ணின் உயிரைப் பறித்த சோகம்!!

15 சித்திரை 2025 செவ்வாய் 13:29 | பார்வைகள் : 1137
பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் நேற்று ஏப்ரல் 14, விஷவாயு தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் அறிந்ததே. கிரையோதெரபி எனப்படும் ஒருவரை சிகிச்சை ஒன்றை பெற்ற பெண் ஒருவரே அவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
11 ஆம் வட்டாரத்தின் Boulevard Voltaire பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் திடீரென விஷவாயு பரவி, ஊழியர் பெழ்ன் ஒருவர் பலியாகியிருந்தார். மேலும் ஒருவர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியிருந்தார்.
கிரையோ தெரபி என்பது மனித உடலை உறைந்த குளிர் தன்மைக்கு கொண்டு செல்லும் ஒரு சிகிச்சையாகும். இதனால் உடலில் உள்ள இறந்த செல்களை அகற்ற முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இரத்தம் பயணிக்கும் வேகத்தை குறைத்து, பின்னர் மீண்டும் வேகத்தை அதிகரிக்கச் செய்வதாகும்.
இந்த சிகிச்சைகள் இதுவரை முழுமையாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் நிலையில், பல மேற்கு நாடுகளில் இந்த சிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த குளிரை உருவாக்க நைதரசன் வாயு பயன்படுத்தப்படுகிறது. அது அளவுக்கு அதிகமாக தாக்கியே நேற்றைய தினம் குறித்த பெண் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.