Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் வரலாற்றில் தோனியின் புதிய சாதனை

ஐபிஎல் வரலாற்றில் தோனியின் புதிய சாதனை

15 சித்திரை 2025 செவ்வாய் 14:23 | பார்வைகள் : 214


ஐபிஎல் (IPL) 2025 தொடரின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் 14 நடைபெற்றது.

இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து 167 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் எம்எஸ் தோனி லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை (Ayush Badoni) ஸ்டம்பிங்க் செய்து வெளியேற்றினார்.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 Dismissals செய்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற பெருமையை சிஎஸ்கே அணித்தலைவர் தோனி பெற்றுள்ளார்.

தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் 155 பிடியெடுப்புக்களையும் 46 ஸ்டம்பிங்குகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்