Paristamil Navigation Paristamil advert login

Porte de Pantin நடைமேடையில் ஆணின் சடலம்!!

Porte de Pantin நடைமேடையில் ஆணின் சடலம்!!

15 சித்திரை 2025 செவ்வாய் 14:36 | பார்வைகள் : 1005


பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Porre de pantin நிலையத்தில் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15, இன்று செவ்வாய்க்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. காலை 6 மணி அளவில் அவசரப்பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் அங்குள்ள T3b ட்ராமுக்குரிய நடைமேடையில் ஆணின் சடலம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது. 40 வயது மதிக்கத்தக்க ஆண் என தெரிவிக்கப்படுகிறது. அவருடைய தோள்பட்டையில் துப்பாக்கிக்குண்டு துளைத்துள்ளதது. இரு சந்தேகநபர்கள் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்