கழிவறை டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம்

15 சித்திரை 2025 செவ்வாய் 14:49 | பார்வைகள் : 1667
நிறுவனத்தில் பணி ஊழியர்கள் சம்பளத்தை தாண்டி, தகுந்த மரியாதை, திறமைக்கேற்ற ஊதிய உயர்வு ஆகியவற்றை நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.
சிலர் நல்ல ஊதியம் கிடைத்தாலும், நிறுவனத்தில் நடத்தப்படும் விதம் பிடிக்காமல், தங்கள் வேலையை ராஜினாமா செய்வது உண்டு.
தற்போது சிங்கப்பூரை சேர்ந்த ஊழியர் ஒருவர், இதே போல் அலுவலகத்தில் மோசமாக நடத்தப்பட்டதால், தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான ராஜினாமா கடிதத்தை கழிவறையில் பயன்படுத்தும் டிஸ்யூ பேப்பரில் எழுதி தான் வேலைபார்த்த நிறுவனத்தில் வழங்கியுள்ளார்.
அந்த கடிதத்தில், "இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதை உணர்த்துவதற்காக நான் ராஜினாமாவுக்கு இந்த காகிதத்தை தேர்ந்தெடுத்தேன்.
நான் வெளியேறுகிறேன்" என எழுதியுள்ளார்.
ஆஞ்சிலா யோஹ்( angela yeoh) என்ற பெண் தொழிலதிபர், இந்த கடிதத்தை தனது Linkedin பக்கத்தில் பகிர்ந்து, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஊழியர்கள் உண்மையாக பாராட்டப்படுவதை உணர வையுங்கள். நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் நன்றியுணர்வுடன் வெளியேறவேண்டும், மன கசப்புடன் அல்ல நிறுவனங்கள் ஊழியர்களை மரியாதையாக நடத்த வேண்டும்.
ஊழியரை சின்ன விஷயங்களுக்கு பாராட்டுவதால்கூட, வேலையில் பல மாற்றங்கள் நடக்கும். பாராட்டுவதுதான் ஒருவரைத் தக்கவைப்பதற்கான கருவி மட்டுமல்ல, அது அவர் செய்யும் வேலைக்காக மட்டுமல்ல, அவர் யார் என்பதற்காகவும் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதைக் காட்டும்" என தெரிவித்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025