Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

காதலியுடன் கல்யாணத்திற்கு வந்த ரவி மோகன்....கண்ணீருடன் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை!

காதலியுடன் கல்யாணத்திற்கு வந்த ரவி மோகன்....கண்ணீருடன் ஆர்த்தி  வெளியிட்ட  அறிக்கை!

9 வைகாசி 2025 வெள்ளி 17:02 | பார்வைகள் : 2964


நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலான நிலையில், இது தொடர்பாக ஆர்த்தி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்தார். தனது பெயரையும் ரவி மோகன் என மாற்றினார். பாடகி கெனிஷாவுடன் காதல் என்ற வதந்திகளுக்கு இருவருமே மறுப்புத் தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில், வேல்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷன் மகளின் திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாகச் சென்ற காட்சிகள் சமூகவலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு வருடமாக, நான் கவசம் போல மௌனத்தை சுமந்து வந்திருக்கிறேன். நான் பலவீனமாக இருந்ததால் அல்ல, ஆனால் என் மகன்கள் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதால். என் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டையும், மோசமான கிசுகிசுப்புகளையும் நான் உள்வாங்கிகொண்டு அமைதியாக இருந்ததற்கு காரணம், உண்மையை சொல்ல வேண்டாம் என்பதல்ல. பெற்றோர்களுக்கிடையிலான அந்த சுமையை குழந்தைகள் சுமக்க வேண்டாம் என்பதால் தான் அமைதியாக இருந்தேன். 
 

ஆனால், இன்று வெளியான புகைப்படங்களையும், அதற்கான தலைப்புகளையும் பார்த்தபோது, யதார்த்தம் வேறு மாதிரியாக தெரிந்தது. எனது விவாகரத்து நடைமுறைகள் தொடர்கிறது. ஆனால் 18 ஆண்டுகளாக நான் அன்பிலும், விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் துணையாக இருந்தவர் என்னை மட்டும் விட்டுச்செல்லவில்லை. ஒரு காலத்தில் எனக்கு உறுதியளித்த பொறுப்புகளிலிருந்தும் விலகிச் சென்றுள்ளார்.

அவர் உண்மையாக இருந்திருந்தால், நான் நீண்ட காலத்திற்கு முன்பே என் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்திருப்பேன். ஆனால் நான் கணக்கீடுகளை விட அன்பைத் தேர்ந்தெடுத்தேன். பரிவர்த்தனையை விட நம்பிக்கையை தேடினேன். இறுதியில் இங்கு வந்து நிற்கிறேன்.

நான் அன்பு செலுத்தியதால் வருத்தப்படவில்லை. ஆனால் என் காதல் மீண்டும் பலவீனமாக்கப்படுவதை பார்க்க முடியாது. என் குழந்தைகள் 10 மற்றும் 14 வயதுடையவர்கள். அவர்களுக்கு பாதுகாப்பு தேவை. அதிர்ச்சி அல்ல. சட்டப்பிரிவுகளை புரிந்துகொள்ளும் வயது அவர்களுக்கு அல்ல. ஆனால் கைவிடப்பட்டதை புரிந்துகொள்ளும் வயது. பதிலளிக்கப்படாத அழைப்புகளும், ரத்து செய்யப்பட்ட சந்திப்புகளையும் அவர்கள் அறியும்போது அது காயங்களாக உருமாறிவிடுகின்றன. 
இன்று நான் ஒரு மனைவியாகப் பேசவில்லை. ஒரு அநீதி இழைக்கப்பட்ட பெண்ணாகக் கூட பேசவில்லை. தன் குழந்தைகளின் நலனை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு தாயாகப் பேசுகிறேன். நான் இப்போது பேசவில்லை என்றால் அவர்களை என்றென்றும் இழந்துவிடுவேன்.

உண்மையை உங்களால் மாற்ற முடியாது. தந்தை என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு பொறுப்பு. சட்டமும் நானும் முடிவெடுக்கும் வரை எனது இன்ஸ்டாகிராம் பெயர் ஆர்த்தி ரவி என்றே இருக்கும். மரியாதைக்குரிய ஊடகங்களுக்கு சட்ட செயல்முறை முடியும் வரை என்னை முன்னாள் மனைவி என்று அழைப்பதைத் தவிர்க்கவும். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. குழந்தைகளை பாதுகாக்கும் தாயின் போராட்டம்.

நான் அழவில்லை. நான் கத்தவில்லை. எனக்கு என்ன வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். இரண்டு குழந்தைகள் இன்றும் உங்களை அப்பா என்று தான் அழைக்கிறார்கள். அவர்களுக்காக நான் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்