சூர்யா - ஆர்ஜே பாலாஜி படத்தின் தலைப்பு இதுவா?

9 வைகாசி 2025 வெள்ளி 18:02 | பார்வைகள் : 139
சூர்யா நடிப்பில் உருவான 'ரெட்ரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் ஆர். ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இது அவரது 45-ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தொழில்நுட்ப பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து, இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்திற்கு ’வேட்டை கருப்பு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படம் கடவுள் சம்பந்தமான ஆன்மீக கதையமைப்புடன் உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், அதனைத் தழுவிய டைட்டிலாகவே இது இருப்பதாக தெரிகிறது.
சூர்யா ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில், ஸ்வாசிகா, காளி வெங்கட், நட்டி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சாய் அபிநயங்கார் இசை அமைத்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.