திருநங்கை வீரர்களைப் பணிநீக்கம் செய்ய அமெரிக்கா உத்தரவு

9 வைகாசி 2025 வெள்ளி 17:45 | பார்வைகள் : 285
அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சில் பணிபுரியும் திருநங்கை வீரர்களைப் பணிநீக்கம் செய்ய உத்தரவு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அடுத்த மாதம் 6ஆம் தேதிக்குள் வேலையிலிருந்து தாமாகவே விலகவில்லை என்றால் அவர்களைப் பணியிலிருந்து நீக்குமாறு தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உத்தரவிட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
எனினும் அது குறித்து அமைச்சு கருத்து வெளியிடவில்லை. இந்நிலையில் டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கைக்கு திருநங்கை உரிமை ஆர்வலர் குழுக்கள் கண்டணம் தெரிவித்துள்ளன.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சில் ஆயிரக்கணக்கான திருநங்கை உறுப்பினர்கள் பணிபுரிகின்றனர்.
அவர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கான தடையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (6 மே) அகற்றியது. ஜூன் 6 ஆம் தேதிக்குள் அமெரிக்க ஆயுதப்படையில் இருந்து சொந்தமாக அவர்கள் வெளியேறலாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை போர்க்காலப் படையினருக்கு ஜூலை 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.