Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்! - ஆச்சரிய தகவல்!

 பிரான்சில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்! - ஆச்சரிய தகவல்!

28 ஆனி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19701


'போட்டோகிராஃபி' என்பது இப்போது இளசுகளிடம் ட்ரெண்ட்! ஒரு DSLR கையில் எடுத்துக்கொண்டு புழு பூச்சி.. காடு கரம்பை எல்லாம் எடுத்து தள்ளுகிறார்கள். புகைப்பட கலைஞர்களின் வேலை முனிவர்களின் தவம் போன்றது. அவர்களின் பொறுமை 'ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா?!' என்ற ரசிகனின் மனநிலை போன்றது. ஒரு 'க்ளிக்' குக்காக மணிக்கணக்கில் ஆடாமல் அசையாமல் இருப்பார்கள். சிலர் வீட்டை விட்டு.. நாட்டை விட்டு எங்கேனும் காட்டுக்குள் பதுங்கிக்கிடந்து புகைப்படம் எடுப்பார்கள். அவர்களை விட்டுவிடலாம் பாவம்! சரி... பிரான்சில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் பற்றி உங்களுக்கு தெரியுமா?! 
 
'மனிதர்களை எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்!' என்ற பெருமை உலகிலேயே பிரான்சுக்கு தான் இருக்கிறது. இந்த புகைப்படத்தில் தான் முதன் முதலாக மனிதன் எனும் 'ஜந்து'வை படம்பிடித்ததாக  ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக்கொண்டு விட்டார்கள். (புகைப்படத்தை மேலே cover photo வில்  பார்த்துக்கொள்ளவும்!) ஆனால் சோகம் என்னவென்றால் புகைப்படக்கலைஞர் போட்டோ பிடித்தது என்னமோ  Boulevard du Temple இல் உள்ள ஒரு கட்டிடத்தை தான்! அவருக்கே தெரியவில்லை! அட கொடுமையே!! 
 
1838 ஆம் ஆண்டு அது. பரிசில் உள்ள  Boulevard du Temple கட்டிடம் புகைப்படம் எடுக்கப்பட்டது. புகைப்படம் எடுத்த புண்ணியவான் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அப்போது இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புகைப்படம் எடுக்க 10 நிமிடங்கள் வேண்டுமாம்.  அதுவும் சூரிய ஒளி பளிச்சென்று இருக்கவேண்டுமாம். இப்படி ஒரு நிலமையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இரு மனிதர்கள் சிக்கிக்கொண்டனர். அதில் ஒருவர் 'ஷூ பாலிஷ்' போடுகிறார். மற்றையவர் அதற்காக காலை நீட்டுகிறார். பிற்பாடு அது, 'First Ever Photograph of a Human Being' என கொண்டாடப்பட்ட ஆரம்பித்தது.
 
புகைப்படம் எடுத்தவர் குறித்த தகவல்கள் எங்கேயும் இல்லை என்பது சோகம்!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்