Paristamil Navigation Paristamil advert login

யுக்ரேன் : அமெரிக்காவுடன் இணைந்த போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் மக்ரோன்!!

யுக்ரேன் : அமெரிக்காவுடன் இணைந்த போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் மக்ரோன்!!

9 வைகாசி 2025 வெள்ளி 21:22 | பார்வைகள் : 825


யுக்ரேனில் 30 நாட்கள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த அழைப்புடன் ஐர்ப்பாவும் இணைந்துகொள்வதாக ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

"நிபந்தனையற்ற 30 நாள் போர்நிறுத்தத்திற்கான மிகத் தெளிவான அழைப்பு" என ட்ரம்ப் அழைப்பு விடுக்க, சற்று முன்னர் ஜனாதிபதி மக்ரோன் “ரஷ்யா நிச்சயமாக இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் போர் நிறுத்தம் இல்லை. 30 நாட்கள்” என போலந்து நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்தார்.

யுக்ரேன் போர் நிறுத்தத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தயாராகி விட்டது எனவும், இப்போது நாம் ரஷ்யாவும் அதனை செய்யவேண்டும் எனவும் மக்ரோன் குறிப்பிட்டார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்