Paristamil Navigation Paristamil advert login

'சிகரம் தொட்ட மனிதர்கள்!' - Albert Londres.

 'சிகரம் தொட்ட மனிதர்கள்!' - Albert Londres.

27 ஆனி 2016 திங்கள் 10:30 | பார்வைகள் : 18830


ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் வாழ்நாள் முழுவதும் எழுதினான். நிழல் உலக ரகசியங்கள் அனைத்தையும் துப்பறிந்தான். எழுத்துலகில் பல புதிய அத்தியாயங்கள் படைத்தான். அரசியல் தலைவர்களுக்கெல்லாம் அவன் சிம்ம சொப்பனம் ஆனான்.  அவனே பின் நாட்களில் 'சிகரம் தொட்ட மனிதர்கள்' ஆனான்!! Let's talk about.. the Great 'Albert Londres'!! மிகச்சிறந்த பத்திரிகையாளன்!! மிகச்சிறந்த எழுத்தாளன்!!
 
பிரான்சின் மத்திய நகரமான  Vichyல், நவம்பர் 1ம் திகதி,  1884 ஆண்டு Londres பிறந்தார். அங்கேயே தனது பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு 1901 ஆண்டு லியோன் நகருக்கு பயணமானார். லியோன் நகரில் அவருக்கு புத்தக விற்பன்னர் வேலை.  அங்கு புத்தங்கள் பரீட்சயமாயிற்று;  நிறைய புத்தகங்கள் வாசித்தார். அதன் பின்னர் 1903 ஆண்டு பரிசுக்கு குடிபெயர்ந்தார். பத்திரிகைகளில் அவ்வப்போது சில கட்டுரைகளை எழுதி வந்தார். இதெல்லாம் ஒரு எழுத்தா..??! நான் எழுதுகிறேன் பார்... என ஒரு கவிதை புத்தகம் வெளியிட்டார். ஒரு காக்காய் கூட சீண்டவில்லை!! ( அப்படித்தான் விக்கிப்பீடியா சொல்கிறது)
 
மனம் தளராத  Londres, 1904 ஆண்டு பரிசிலும் லியோன் நகரிலும் வெளியாகும் Le Salut Public பத்திரிகையில் நிருபராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் இரண்டு வருடம் கழித்து, Le Matin பத்திரிகையில் பாராளுமன்ற செய்திகளை தொகுத்து எழுதும் நிருபர் ஆனார். பாராளுமன்றத்தையே கட்டிக்கொண்டு அழுததால்... அரசியல் பிடிபட்டது. அரசியலில் உள்ள மூலை முடுக்கு... சந்து பொந்து அனைத்தையும் அறிந்துகொண்டார் Londres. அதன் பின்னர் அரசியல் குறித்து பத்திரிகையில் எழுதினார். தன் எழுத்து திறமையால் அரசியல்களை ஆட்டம் காண வைத்தார். அது போதாதென்று முதலாம் உலகப்போர் சமயம் அவரை யுத்தகள நிருபராக மாற்றிவிட்டார்கள். அங்கேயும் யுத்தம் குறித்த பல தகவல்கள்... பிரான்சின் நகர்வுகள் என எழுதி தள்ளினார். இவர் கட்டுரைகளை... பத்தி எழுத்துக்களை வாசிப்பதற்கென பத்திரிகைகள் விற்பனையாகின. இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியது. 
 
அதுவும் பத்தாது என ஐரோப்பாவுக்கே மிகப்பெரும் பத்திரிகையாளர் ஆனார் Londres. Serbia, Greece, Turkey மற்றும் Albania என பல நாடுகளில் அரசியல் அந்தரங்களை தன் பத்தி எழுத்துக்களில் எழுதி பட்டையை கிளப்பினார். ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு வந்தார். ஜவகர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார் என்றால் பாருங்களேன். 
 
இப்படியாக உலகம் அறிந்த எழுத்தாளர் + பத்திரிகையாளர் ஆனார் Londres. பின்நாட்களில் அவர் மறைவுக்கு பின்னர், அவரின் மகள் தன் அப்பா பெயரில் விருது வழங்க வேண்டும் என ஆசைப்பட்டு உருவாக்கியதுதான்...  Albert Londres Prize!! (சிறந்த நிருபருக்கான விருது. இதுதொடர்பான தகவல்களை 'பிரெஞ்சு புதினம்' முன்னர் வெளியிட்டிருந்தது) 
 
தன்னுடைய 47வது வயதில், மே மாதம் 16ம் திகதி 1932 ஆண்டு இறந்தார் Londres. அதற்கு அடுத்த வருடமே அவர் பெயரால் விருதுகள் வழங்க ஆரம்பிக்கப்பட்டது. இன்று " Albert Londres Prize" விருது, அனைத்து நிருபர்களுக்கும் ஒரு தவம்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்