கோல் மழைபொழிந்த இந்திய அணி! ஹாட்ரிக் அடித்த வீரர்..கதிகலங்கிய இலங்கை

10 வைகாசி 2025 சனி 12:13 | பார்வைகள் : 113
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு U-20 கால்பந்து போட்டியில், இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் இலங்கையை வீழ்த்தியது.
கோல்டன் ஜூபிலி மைதானத்தில் நேற்று நடந்த SAFF U-20 கால்பந்து போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் இந்தியாவின் பிரஷான் ஜஜோ கோல் அடித்தார். அடுத்த 9 நிமிடங்களில் டேனி மெய்தேய் (Danny Meitei) கோல் அடித்தார்.
பின்னர் அவரே 31வது நிமிடத்திலும் கோல் அடித்தார். அர்பாஷ் (40வது நிமிடம்), ஓமங் டோடும் (48வது நிமிடம்) ஆகியோரும் இலங்கையின் தடுப்பு அரணை உடைத்து கோல்கள் அடித்தனர்.
50வது நிமிடத்தில் டேனி மெய்தேய் தனது ஹாட்ரிக் கோலினை அடிக்க, 81வது நிமிடத்தில் ஷமி ஒரு கோல் அடித்தார்.
இலங்கை அணியால் கடைசிவரை ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.